PepLamb's Audio Bible
Loading God's Word...
என் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு | யோவான் 21:15-17
Gen.8.1

தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.
 
Tēvaṉ nōvāvaiyum, avaṉuṭaṉē pēḻaiyilirunta cakala kāṭṭu mirukaṅkaḷaiyum, cakala nāṭṭu mirukaṅkaḷaiyum niṉaittaruḷiṉār; tēvaṉ pūmiyiṉmēl kāṟṟai vīcappaṇṇiṉār, appoḻutu jalam amarntatu.
God remembered Noah and all the wild animals and all the wild animals that were with him in the ark; God caused the wind to blow over the earth, and the waters settled.

ஆதியாகமம் 8
ஆதியாகமம் 8:1-5
ஆதியாகமம் 8:1-22

The Ark Rests on Ararat

The Flood Subsides
1 தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.
 
Tēvaṉ nōvāvaiyum, avaṉuṭaṉē pēḻaiyilirunta cakala kāṭṭu mirukaṅkaḷaiyum, cakala nāṭṭu mirukaṅkaḷaiyum niṉaittaruḷiṉār; tēvaṉ pūmiyiṉmēl kāṟṟai vīcappaṇṇiṉār, appoḻutu jalam amarntatu.
God remembered Noah and all the wild animals and all the wild animals that were with him in the ark; God caused the wind to blow over the earth, and the waters settled.
2 ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோயிற்று.
 
Āḻattiṉ ūṟṟukkaṇkaḷum, vāṉattiṉ matakukaḷum aṭaipaṭṭaṉa; vāṉattu maḻaiyum niṉṟupōyiṟṟu.
The fountains of the deep and the sluices of the sky were stopped up; The rain also stopped.
3 ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; நூற்றைம்பது நாளுக்குப்பின்பு ஜலம் வடிந்தது.
 
Jalam pūmiyiliruntu nāḷukkunāḷ vaṟṟikkoṇṭē vantatu; nūṟṟaimpatu nāḷukkuppiṉpu jalam vaṭintatu.
The water was drying up from the earth day by day; After one hundred and fifty days the water ran out.
4 ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.
 
Ēḻām mātam patiṉēḻām tētiyilē pēḻai ararāt eṉṉum malaikaḷiṉmēl taṅkiṟṟu.
On the seventeenth day of the seventh month, the ark came to rest on the mountains of Ararat.
5 பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.
 
Pattām mātam maṭṭum jalam vaṭintukoṇṭē vantatu; pattām mātam mutal tētiyilē malaiccikaraṅkaḷ kāṇappaṭṭaṉa.
Only in the tenth month did the water flow; Mountain peaks were seen on the first day of the tenth month.

Noah Sends a Raven and a Dove

6 நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,
 
Nāṟpatu nāḷ ceṉṟapiṉ, nōvā tāṉ pēḻaiyil ceytirunta jaṉṉalait tiṟantu,
After forty days, Noah opened the window he had made in the ark.
7 ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது.
 
Oru kākattai veḷiyē viṭṭāṉ; atu puṟappaṭṭup pūmiyiṉmēl irunta jalam vaṟṟippōkumvaraikkum pōkiṟatum varukiṟatumāy iruntatu.
He let out a crow; It came and went until the water on the earth dried up.
8 பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.
 
Piṉpu pūmiyiṉmēl jalam kuṟaintu pōyiṟṟō eṉṟu aṟiyumpaṭi, oru puṟāvait taṉṉiṭattiliruntu veḷiyē viṭṭāṉ.
Then he sent a dove out of him to see if the water had abated on the earth.
9 பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப்பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.
 
Pūmiyiṉmīteṅkum jalam iruntapaṭiyāl, antap puṟā taṉ uḷḷaṅkāl vaittu iḷaippāṟa iṭam kāṇāmal, tirumpip pēḻaiyilē avaṉiṭattil vantatu; avaṉ taṉ kaiyai nīṭṭi ataippiṭittut taṉṉiṭamākap pēḻaikkuḷ cērttukkoṇṭāṉ.
Because there was water all over the earth, the dove found no place to rest its soles, and returned to him in the ark; He reached out his hand and took it and took it with him into the ark.
10 பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான்.
 
Piṉṉum ēḻu nāḷ poṟuttu, maṟupaṭiyum puṟāvaip pēḻaiyiliruntu veḷiyē viṭṭāṉ.
After seven days, he again let the dove out of the ark.
11 அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்துபோயிற்று என்று அறிந்தான்.
 
Antap puṟā cāyaṅkālattil avaṉiṭattil vantu cērntatu; itō, atu kottikkoṇṭuvanta oru olivamarattiṉ ilai atiṉ vāyil iruntatu; atiṉālē nōvā pūmiyiṉmēl jalam kuṟaintupōyiṟṟu eṉṟu aṟintāṉ.
The dove came to him in the evening; Behold, an olive leaf was in its mouth, which it had plucked; That is why Noah knew that the water on the earth was reduced.
12 பின்னும் ஏழு நாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை.
 
Piṉṉum ēḻu nāḷ poṟuttu, avaṉ puṟāvai veḷiyē viṭṭāṉ; atu avaṉiṭattiṟkut tirumpi varavillai.
And after seven days, he sent out the dove; It never came back to him.

Exiting the Ark

13 அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல்தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.
 
Avaṉukku aṟunūṟṟoru vayatākum varuṣattil, mutal mātam mutal tētiyilē pūmiyiṉmēl irunta jalam vaṟṟippōyiṟṟu; nōvā pēḻaiyiṉ mēltaṭṭai eṭuttuppārttāṉ; pūmiyiṉmēl jalam illātiruntatu.
In the year that he was six hundred and one years old, on the first day of the first month, the waters dried up from the earth; Noah looked at the top of the ark; There was no water on earth.
14 இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது.
 
Iraṇṭām mātam irupattēḻām tētiyilē pūmi kāyntiruntatu.
On the twenty-seventh day of the second month, the earth was dry.
15 அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி;
 
Appoḻutu tēvaṉ nōvāvai nōkki;
Then God said to Noah;
16 நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள்.
 
Nīyum, uṉṉōṭēkūṭa uṉ maṉaiviyum, uṉ kumārarum, uṉ kumārariṉ maṉaivikaḷum pēḻaiyai viṭṭup puṟappaṭuṅkaḷ.
Get out of the ark, you and your wife and your sons and your sons' wives with you.
17 உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார்.
 
Uṉṉiṭattil irukkiṟa cakalavita māmcajantukkaḷākiya paṟavaikaḷaiyum, mirukaṅkaḷaiyum, pūmiyiṉmēl ūrukiṟa cakala pirāṇikaḷaiyum uṉṉōṭē veḷiyē varaviṭu; avaikaḷ pūmiyilē tiraḷāy varttittu, pūmiyiṉmēl palukip perukakkaṭavatu eṉṟār.
Bring out with you all the birds and beasts that you have, and all the creatures that move on the earth; He said that they spread on the earth in multitudes and multiply on the earth.
18 அப்பொழுது நோவாவும், அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் புறப்பட்டு வந்தார்கள்.
 
Appoḻutu nōvāvum, avaṉ kumārarum, avaṉ maṉaiviyum, avaṉ kumārariṉ maṉaivikaḷum puṟappaṭṭu vantārkaḷ.
Then Noah, his sons, his wife, and his sons' wives set out.
19 பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன.
 
Pūmiyiṉmēl naṭamāṭukiṟa cakala mirukaṅkaḷum, ūrukiṟa cakala pirāṇikaḷum, cakala paṟavaikaḷum jātijātiyāyp pēḻaiyiliruntu puṟappaṭṭu vantaṉa.
All the animals that move on the earth, all the creeping animals, and all the birds came out of the ark by their kind.

Noah Builds an Altar

20 அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.
 
Appoḻutu nōvā karttarukku oru palipīṭam kaṭṭi, cuttamāṉa cakala mirukaṅkaḷilum, cuttamāṉa cakala paṟavaikaḷilum cilavaṟṟait terintukoṇṭu, avaikaḷaip palipīṭattiṉmēl takaṉapalikaḷākap paliyiṭṭāṉ.
Then Noah built an altar to the Lord and chose some of every clean animal and every clean bird and offered them as burnt offerings on the altar.
21 சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கி பொல்லாததாயிருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.
 
Cukanta vācaṉaiyaik karttar mukarntār. Appoḻutu karttar: Iṉi nāṉ maṉuṣaṉ nimittam pūmiyaic capippatillai; maṉuṣaṉuṭaiya irutayattiṉ niṉaivukaḷ avaṉ ciṟuvayatu toṭaṅki pollātatāyirukkiṟatu; nāṉ ippoḻutu ceytatupōla, iṉi cakala jīvaṉkaḷaiyum caṅkarippatillai.
The Lord smelled the fragrance. And the Lord said: No more will I curse the ground because of man; The memories of a man's heart are evil from his youth; As I have done now, I shall no longer confound all beings.
22 பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.
 
Pūmiyuḷḷa nāḷaḷavum vitaippum aṟuppum, cītaḷamum uṣṇamum, kōṭaikālamum mārikālamum, pakalum iravum oḻivatillai eṉṟu tam'muṭaiya uḷḷattil coṉṉār.
He said in his heart that sowing and reaping, heat and summer, summer and winter, day and night will not end as long as the earth is alive.
ஆதியாகமம் 8:1-க்கான விளக்கப்படம்

குறுக்கு மேற்கோள்கள்

இந்த வசனத்திற்கு குறுக்கு மேற்கோள்கள் இல்லை.