PepLamb's Audio Bible
Loading God's Word...
என் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு | யோவான் 21:15-17
Gen.7.1
TAOVBSI தேவன்

கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.
 
Karttar nōvāvai nōkki: Nīyum uṉ vīṭṭār aṉaivarum pēḻaikkuḷ piravēciyuṅkaḷ; intac cantatiyil uṉṉai eṉakku muṉpāka nītimāṉākak kaṇṭēṉ.
The Lord said to Noah: Enter the ark, you and all your household; I found you righteous before me in this generation.

ஆதியாகமம் 7
ஆதியாகமம் 7:1-24

The Great Flood

1 கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.
 
Karttar nōvāvai nōkki: Nīyum uṉ vīṭṭār aṉaivarum pēḻaikkuḷ piravēciyuṅkaḷ; intac cantatiyil uṉṉai eṉakku muṉpāka nītimāṉākak kaṇṭēṉ.
The Lord said to Noah: Enter the ark, you and all your household; I found you righteous before me in this generation.
2 பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடே காக்கும்பொருட்டு, நீ சுத்தமான சகல மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக எவ்வேழு ஜோடும், சுத்தமில்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும்,
 
Pūmiyiṉmīteṅkum vittai uyirōṭē kākkumporuṭṭu, nī cuttamāṉa cakala mirukaṅkaḷilum, āṇum peṇṇumāka evvēḻu jōṭum, cuttamillāta mirukaṅkaḷil āṇum peṇṇumāka ovvoru jōṭum,
To keep the seed alive upon the earth, Thou of every clean beast, every pair of male and female, every pair of unclean beasts, male and female,
3 ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்.
 
Ākāyattup paṟavaikaḷilum, cēvalum pēṭumāka evvēḻu jōṭum uṉṉiṭattil cērttukkoḷ.
And of the fowls of the air, gather unto thee every couple, the cock and the bird.
4 இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் இராதபடிக்கு நிக்கிரகம்பண்ணுவேன் என்றார்.
 
Iṉṉum ēḻunāḷ ceṉṟapiṉpu, nāṟpatunāḷ iravum pakalum pūmiyiṉmēl maḻaiyai varuṣikkappaṇṇi, nāṉ uṇṭākkiṉa jīvajantukkaḷ aṉaittaiyum pūmiyiṉmēl irātapaṭikku nikkirakampaṇṇuvēṉ eṉṟār.
After another seven days, I will cause rain to fall on the earth for forty days and nights, and I will destroy all the living creatures that I have created so that they will not be on the earth.
5 நோவா தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான்.
 
Nōvā taṉakkuk karttar kaṭṭaḷaiyiṭṭapaṭiyellām ceytāṉ.
Noah did everything the Lord commanded him.
6 ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு வயதாயிருந்தான்.
 
Jalappiraḷayam pūmiyiṉmēl uṇṭāṉapōtu, nōvā aṟunūṟu vayatāyiruntāṉ.
Noah was six hundred years old when the flood came upon the earth.
7 ஜலப்பிரளயத்துக்குத் தப்பும்படி நோவாவும் அவனுடனேகூட அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசித்தார்கள்.
 
Jalappiraḷayattukkut tappumpaṭi nōvāvum avaṉuṭaṉēkūṭa avaṉ kumārarum, avaṉ maṉaiviyum, avaṉ kumārariṉ maṉaivikaḷum pēḻaikkuḷ piravēcittārkaḷ.
Noah and his sons, his wife, and his sons' wives entered the ark to escape the flood.
8 தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமல்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும்,
 
Tēvaṉ nōvāvukkuk kaṭṭaḷaiyiṭṭapaṭiyē, cuttamāṉa mirukaṅkaḷilum, cuttamallāta mirukaṅkaḷilum, pūmiyiṉmēl ūrum pirāṇikaḷ ellāvaṟṟilum,
As God commanded Noah, of the clean beasts, and of the unclean beasts, and of every living thing that creepeth upon the earth,
9 ஆணும் பெண்ணும் ஜோடுஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குட்பட்டன.
 
Āṇum peṇṇum jōṭujōṭāka nōvāviṭattil pēḻaikkuṭpaṭṭaṉa.
A man and a woman entered Noah's ark in pairs.
10 ஏழுநாள் சென்றபின்பு பூமியின்மேல் ஜலப்பிரளயம் உண்டாயிற்று.
 
Ēḻunāḷ ceṉṟapiṉpu pūmiyiṉmēl jalappiraḷayam uṇṭāyiṟṟu.
After seven days there was a flood on the earth.
11 நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன.
 
Nōvāvukku aṟunūṟām vayatākum varuṣam iraṇṭām mātam patiṉēḻām tētiyākiya annāḷilē, makā āḻattiṉ ūṟṟukkaṇkaḷellām piḷantaṉa; vāṉattiṉ matakukaḷum tiṟavuṇṭaṉa.
On that day, which was the seventeenth day of the second month of the six hundredth year of Noah, all the fountains of the great deep were broken up; The floodgates of heaven were opened.
12 நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.
 
Nāṟpatunāḷ iravum pakalum pūmiyiṉmēl perumaḻai peytatu.
It rained heavily on the earth for forty days and nights.
13 அன்றைத்தினமே நோவாவும், நோவாவின் குமாரராகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவன் குமாரரின் மூன்று மனைவிகளும், பேழைக்குள் பிரவேசித்தார்கள்.
 
Aṉṟaittiṉamē nōvāvum, nōvāviṉ kumārarākiya cēmum kāmum yāppēttum, avarkaḷuṭaṉēkūṭa nōvāviṉ maṉaiviyum, avaṉ kumārariṉ mūṉṟu maṉaivikaḷum, pēḻaikkuḷ piravēcittārkaḷ.
That same day, Noah, Noah's sons Shem, Ham and Japheth, along with Noah's wife and the three wives of his sons, entered the ark.
14 அவர்களோடு ஜாதிஜாதியான சகலவிதக் காட்டு மிருகங்களும், ஜாதிஜாதியான சகலவித நாட்டு மிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற ஜாதிஜாதியான சகலவித ஊரும் பிராணிகளும், ஜாதிஜாதியான சகலவிதப் பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள சகலவிதப் பட்சிகளும் பிரவேசித்தன.
 
Avarkaḷōṭu jātijātiyāṉa cakalavitak kāṭṭu mirukaṅkaḷum, jātijātiyāṉa cakalavita nāṭṭu mirukaṅkaḷum, pūmiyiṉmēl ūrukiṟa jātijātiyāṉa cakalavita ūrum pirāṇikaḷum, jātijātiyāṉa cakalavitap paṟavaikaḷum, palavitamāṉa ciṟakukaḷuḷḷa cakalavitap paṭcikaḷum piravēcittaṉa.
With them came every kind of wild beast, every kind of domestic animal, every kind of animal that moves on the earth, every kind of bird, and every kind of bird with many kinds of wings.
15 இப்படியே ஜீவசுவாசமுள்ள மாம்ச ஜந்துக்களெல்லாம் ஜோடுஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குள் பிரவேசித்தன.
 
Ippaṭiyē jīvacuvācamuḷḷa māmca jantukkaḷellām jōṭujōṭāka nōvāviṭattil pēḻaikkuḷ piravēcittaṉa.
In this way, all the living creatures of the flesh entered the ark at Noah's place one by one.
16 தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக சகலவித மாம்சஜந்துக்களும் உள்ளே பிரவேசித்தன; அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார்.
 
Tēvaṉ avaṉukkuk kaṭṭaḷaiyiṭṭapaṭiyē, āṇum peṇṇumāka cakalavita māmcajantukkaḷum uḷḷē piravēcittaṉa; appoḻutu karttar avaṉai uḷḷē viṭṭuk katavai aṭaittār.
As God commanded him, all flesh, male and female, entered in; Then the Lord let him in and shut the door.
17 ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின்மேல் உண்டானபோது, ஜலம் பெருகி, பேழையைக் கிளம்பப்பண்ணிற்று; அது பூமிக்குமேல் மிதந்தது.
 
Jalappiraḷayam nāṟpatu nāḷ pūmiyiṉmēl uṇṭāṉapōtu, jalam peruki, pēḻaiyaik kiḷampappaṇṇiṟṟu; atu pūmikkumēl mitantatu.
When the flood was forty days upon the earth, the waters increased, and caused the ark to depart; It floated above the earth.
18 ஜலம் பெருவெள்ளமாகி, பூமியின்மேல் மிகவும் பெருகிற்று; பேழையானது ஜலத்தின்மேல் மிதந்துகொண்டிருந்தது.
 
Jalam peruveḷḷamāki, pūmiyiṉmēl mikavum perukiṟṟu; pēḻaiyāṉatu jalattiṉmēl mitantukoṇṭiruntatu.
The waters became a great flood, and greatly increased upon the earth; The ark was floating on water.
19 ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.
 
Jalam pūmiyiṉmēl mikavum atikamāyp perukiṉatiṉāl, vāṉattiṉkīḻ eṅkumuḷḷa uyarnta malaikaḷellām mūṭappaṭṭaṉa.
And the waters abounded upon the earth, and all the high mountains under heaven were covered.
20 மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப் பதினைந்துமுழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று.
 
Mūṭappaṭṭa malaikaḷukku mēlāyp patiṉaintumuḻa uyarattiṟku jalam perukiṟṟu.
The water rose to a height of fifteen cubits above the covered mountains.
21 அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டு மிருகங்களும், காட்டு மிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன.
 
Appoḻutu māmcajantukkaḷākiya paṟavaikaḷum, nāṭṭu mirukaṅkaḷum, kāṭṭu mirukaṅkaḷum, pūmiyiṉmēl ūrum pirāṇikaḷ yāvum, ellā narajīvaṉkaḷum, pūmiyiṉmēl cañcarikkiṟavaikaḷ yāvum māṇṭaṉa.
Then the birds of the flesh, the domestic animals, the wild animals, all the animals that move on the earth, all the human beings, and all the things that move on the earth died.
22 வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின.
 
Veṭṭāntaraiyil uṇṭāṉa ellāvaṟṟilum nāciyilē jīvacuvācamuḷḷavaikaḷ ellām māṇṭupōyiṉa.
All living creatures in the air died.
23 மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின; நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன.
 
Maṉuṣar mutal, mirukaṅkaḷ, ūrum pirāṇikaḷ, ākāyattup paṟavaikaḷ pariyantamum, pūmiyiṉmēl irunta uyiruḷḷa vastukkaḷ yāvum aḻintu, avaikaḷ pūmiyil irātapaṭikku nikkirakamāyiṉa; nōvāvum avaṉōṭē pēḻaiyilirunta uyirkaḷum māttiram kākkappaṭṭaṉa.
From men, to beasts, to creeping things, to the birds of the air, and all the living things that were upon the earth perished, and they became black so that they were not on the earth; Only Noah and the souls in the ark were saved.
24 ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக்கொண்டிருந்தது.
 
Jalam pūmiyiṉmēl nūṟṟaimpatu nāḷ mikavum piravākittukkoṇṭiruntatu.
The waters were flowing over the earth for one hundred and fifty days.
ஆதியாகமம் 7:1-க்கான விளக்கப்படம்ஆதியாகமம் 7:1-க்கான விளக்கப்படம்

குறுக்கு மேற்கோள்கள்

இந்த வசனத்திற்கு குறுக்கு மேற்கோள்கள் இல்லை.