PepLamb's Audio Bible
Loading God's Word...
என் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு | யோவான் 21:15-17
Gen.6.1

மனுஷர் பூமியின்மேல் பெருகத்துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது:
 
Maṉuṣar pūmiyiṉmēl perukattuvakki, avarkaḷukkuk kumārattikaḷ piṟantapōtu:
When men multiplied upon the earth, and daughters were born unto them:

ஆதியாகமம் 6
ஆதியாகமம் 6:1-7
ஆதியாகமம் 6:1-22

Corruption on the Earth

The Corruption of Mankind
1 மனுஷர் பூமியின்மேல் பெருகத்துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது:
 
Maṉuṣar pūmiyiṉmēl perukattuvakki, avarkaḷukkuk kumārattikaḷ piṟantapōtu:
When men multiplied upon the earth, and daughters were born unto them:
2 தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்
 
Tēvakumārar maṉuṣakumārattikaḷai atika ceḷantariyamuḷḷavarkaḷeṉṟu kaṇṭu, avarkaḷukkuḷḷē taṅkaḷukkup peṇkaḷait terintukoṇṭārkaḷ
The sons of God found the daughters of men to be more illustrious and chose their wives from among them.
3 அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.
 
Appoḻutu karttar: Eṉ āvi eṉṟaikkum maṉuṣaṉōṭē pōrāṭuvatillai; avaṉ māmcantāṉē, avaṉ irukkappōkiṟa nāṭkaḷ nūṟṟirupatu varuṣam eṉṟār.
Then the Lord said: My spirit will never strive with man; He said, "He is flesh, and the days of his existence will be one hundred and twenty years."
4 அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.
 
Annāṭkaḷil irāṭcatar pūmiyilē iruntārkaḷ; piṉpu tēvakumārar maṉuṣakumārattikaḷōṭē kūṭukiṟatiṉāl, ivarkaḷ avarkaḷukkup piḷḷaikaḷaip peṟṟapōtu, ivarkaḷum pūrvattil pērpeṟṟa maṉuṣarākiya palavāṉkaḷāṉārkaḷ.
In those days giants were on the earth; Later, because the sons of God met with the daughters of men, when they bore children to them, they also became mighty men, famous in the past.
5 மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,
 
Maṉuṣaṉuṭaiya akkiramam pūmiyilē perukiṉatu eṉṟum, avaṉ irutayattu niṉaivukaḷiṉ tōṟṟamellām nittamum pollātatē eṉṟum, karttar kaṇṭu,
The Lord saw that man's iniquity had multiplied in the earth, and that all the thoughts of his heart were evil for ever.
6 தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.
 
Tām pūmiyilē maṉuṣaṉai uṇṭākkiṉataṟkākak karttar maṉastāpappaṭṭār; atu avar irutayattukku vicaṉamāyiruntatu.
The Lord was sorry that he had made man on earth; It saddened his heart.
7 அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார்.
 
Appoḻutu karttar: Nāṉ ciruṣṭitta maṉuṣaṉaip pūmiyiṉmēl vaikkāmal, maṉuṣaṉ mutaṟkoṇṭu, mirukaṅkaḷ ūrum pirāṇikaḷ ākāyattup paṟavaikaḷ pariyantamum uṇṭāyirukkiṟavaikaḷai nikkirakampaṇṇuvēṉ; nāṉ avarkaḷai uṇṭākkiṉatu eṉakku maṉastāpamāyirukkiṟatu eṉṟār.
Then the Lord said: I will not put man, whom I have created, on the earth, but from the beginning of man, I will destroy all living things, beasts, creeping things, birds of the air, and living things; He said that I am sorry that I made them.

Noah’s Favor with God

8 நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.
 
Nōvāvukkō, karttaruṭaiya kaṇkaḷil kirupai kiṭaittatu.
Noah found favor in God's eyes.
9 நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.
 
Nōvāviṉ vamcavaralāṟu: Nōvā taṉ kālattil iruntavarkaḷukkuḷḷē nītimāṉum uttamaṉumāyiruntāṉ; nōvā tēvaṉōṭē cañcarittukkoṇṭiruntāṉ.
Genealogy of Noah: Noah was righteous and upright among those of his time; Noah was walking with God.
10 நோவா சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று குமாரரைப் பெற்றான்.
 
Nōvā cēm, kām, yāppēt eṉṉum mūṉṟu kumāraraip peṟṟāṉ.
Noah had three sons, Shem, Ham, and Japheth.
11 பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.
 
Pūmiyāṉatu tēvaṉukku muṉpākac cīrkeṭṭatāyiruntatu; pūmi koṭumaiyiṉāl niṟaintiruntatu.
The earth was corrupt before God; The earth was filled with cruelty.
12 தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
 
Tēvaṉ pūmiyaip pārttār; itō atu cīrkeṭṭatāyiruntatu; māmcamāṉa yāvarum pūmiyiṉmēl taṅkaḷ vaḻiyaik keṭuttukkoṇṭiruntārkaḷ.
God saw the earth; Behold, it was corrupted; All flesh was corrupting their way upon the earth.

Preparing the Ark

13 அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்.
 
Appoḻutu tēvaṉ nōvāvai nōkki: Māmcamāṉa yāvariṉ muṭivum eṉakku muṉpāka vantatu; avarkaḷālē pūmi koṭumaiyiṉāl niṟaintatu; nāṉ avarkaḷaip pūmiyōṭuṅkūṭa aḻittuppōṭuvēṉ.
Then God said to Noah: The end of all flesh has come before me; Because of them the earth is filled with cruelty; I will destroy them with the earth.
14 நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாகக் கீல்பூசு.
 
Nī koppēr marattāl uṉakku oru pēḻaiyai uṇṭākku; antap pēḻaiyilē aṟaikaḷai uṇṭupaṇṇi, atai uḷḷum puṟampumākak kīlpūcu.
And thou shalt make thee an ark of sycamore wood; Make rooms in the ark and nail it inside and out.
15 நீ அதைப் பண்ணவேண்டிய விதம் என்னவென்றால், பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதின் அகலம் ஐம்பது முழமும், அதின் உயரம் முப்பது முழமுமாய் இருக்கவேண்டும்.
 
Nī ataip paṇṇavēṇṭiya vitam eṉṉaveṉṟāl, pēḻaiyiṉ nīḷam munnūṟu muḻamum, atiṉ akalam aimpatu muḻamum, atiṉ uyaram muppatu muḻamumāy irukkavēṇṭum.
The manner in which you shall make it is that the length of the ark shall be three hundred cubits, its breadth fifty cubits, and its height thirty cubits.
16 நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுபண்ணி, மேல்தட்டுக்கு ஒரு முழத் தாழ்த்தியிலே அதைச் செய்துமுடித்து, பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும்.
 
Nī pēḻaikku ōr jaṉṉalai uṇṭupaṇṇi, mēltaṭṭukku oru muḻat tāḻttiyilē ataic ceytumuṭittu, pēḻaiyiṉ katavai atiṉ pakkattil vaittu, kīḻ aṟaikaḷaiyum, iraṇṭām taṭṭiṉ aṟaikaḷaiyum, mūṉṟām taṭṭiṉ aṟaikaḷaiyum paṇṇavēṇṭum.
You shall make a window for the ark and finish it a cubit lower than the upper deck, and put the door of the ark on its side, and make the lower chambers, the chambers of the second plate, and the chambers of the third plate.
17 வானத்தின்கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்ச ஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம்.
 
Vāṉattiṉkīḻē jīvacuvācamuḷḷa cakala māmca jantukkaḷaiyum aḻikka nāṉ pūmiyiṉmēl jalappiraḷayattai varappaṇṇuvēṉ; pūmiyiluḷḷa yāvum māṇṭupōm.
I will bring a flood upon the earth to destroy every living creature under heaven; Everything on earth will perish.
18 ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள்.
 
Āṉālum uṉṉuṭaṉē eṉ uṭaṉpaṭikkaiyai ēṟpaṭuttuvēṉ; nīyum, uṉṉōṭēkūṭa uṉ kumārarum, uṉ maṉaiviyum, uṉ kumārariṉ maṉaivikaḷum, pēḻaikkuḷ piravēciyuṅkaḷ.
But I will establish my covenant with you; Enter the ark, you and your sons and your wives and your sons' wives with you.
19 சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள்.
 
Cakalavita māmcamāṉa jīvaṉkaḷilum āṇum peṇṇumāka vakai oṉṟukku ovvoru jōṭu uṉṉuṭaṉ uyirōṭē kākkappaṭuvataṟku, pēḻaikkuḷḷē cērttukkoḷ.
Gather into the ark every pair of all flesh, male and female, to be kept alive with you.
20 ஜாதிஜாதியான பறவைகளிலும், ஜாதிஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதிஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உயிரோடே காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரக்கடவது.
 
Jātijātiyāṉa paṟavaikaḷilum, jātijātiyāṉa mirukaṅkaḷilum, pūmiyiluḷḷa cakala jātijātiyāṉa ūrum pirāṇikaḷilum, vakai oṉṟukku ovvoru jōṭu uyirōṭē kākkappaṭuvataṟku uṉṉiṭattilē varakkaṭavatu.
Of every kind of bird, and of every kind of beast, and of every kind of man and beast of the earth, every pair of every kind shall come unto thee to be kept alive.
21 உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகச் சகலவித போஜனபதார்த்தங்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள் என்றார்.
 
Uṉakkum avaikaḷukkum ākāramākac cakalavita pōjaṉapatārttaṅkaḷaiyum cērttu, uṉṉiṭattil vaittukkoḷ eṉṟār.
He said, "Take all kinds of food as food for you and them, and keep it with you."
22 நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.
 
Nōvā appaṭiyē ceytāṉ; tēvaṉ taṉakkuk kaṭṭaḷaiyiṭṭapaṭiyellām avaṉ ceytu muṭittāṉ.
Noah did just that; He did everything God commanded him to do.
ஆதியாகமம் 6:1-க்கான விளக்கப்படம்

குறுக்கு மேற்கோள்கள்

இந்த வசனத்திற்கு குறுக்கு மேற்கோள்கள் இல்லை.