PepLamb's Audio Bible
Loading God's Word...
என் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு | யோவான் 21:15-17
Gen.4.1

ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.
 
Ātām taṉ maṉaiviyākiya ēvāḷai aṟintāṉ; avaḷ karppavatiyāki, kāyīṉaip peṟṟu, karttarāl oru maṉuṣaṉaip peṟṟēṉ eṉṟāḷ.
Adam knew his wife Eve; She conceived and gave birth to Cain, and said she had received a man from the Lord.

ஆதியாகமம் 4
ஆதியாகமம் 4:1-16
ஆதியாகமம் 4:1-26

Cain and Abel

Cain and Abel
1 ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.
 
Ātām taṉ maṉaiviyākiya ēvāḷai aṟintāṉ; avaḷ karppavatiyāki, kāyīṉaip peṟṟu, karttarāl oru maṉuṣaṉaip peṟṟēṉ eṉṟāḷ.
Adam knew his wife Eve; She conceived and gave birth to Cain, and said she had received a man from the Lord.
2 பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.
 
Piṉpu avaṉuṭaiya cakōtaraṉākiya āpēlaip peṟṟāḷ; āpēl āṭukaḷai mēykkiṟavaṉāṉāṉ, kāyīṉ nilattaip payiriṭukiṟavaṉāṉāṉ.
Then she bore his brother Abel; Abel became a herder of sheep and Cain became a tiller of the land.
The First Murder
3 சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.
 
Cilanāḷ ceṉṟapiṉpu, kāyīṉ nilattiṉ kaṉikaḷaik karttarukkuk kāṇikkaiyākak koṇṭuvantāṉ.
After a few days, Cain brought the fruits of the land as an offering to the Lord.
4 ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.
 
Āpēlum taṉ mantaiyiṉ talaiyīṟṟukaḷilum avaikaḷiṉ koḻumaiyāṉavaikaḷilum cilavaṟṟaik koṇṭuvantāṉ. Āpēlaiyum avaṉ kāṇikkaiyaiyum karttar aṅkikarittār.
Abel also brought some of the heads of his flock and of their fatness. The Lord accepted Abel and his offering.
5 காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.
 
Kāyīṉaiyum avaṉ kāṇikkaiyaiyum avar aṅkikarikkavillai. Appoḻutu kāyīṉukku mikavum ericcal uṇṭāki, avaṉ mukanāṭi vēṟupaṭṭatu.
He did not accept Cain and his offering. Then Cain was very angry, and his countenance changed.
6 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?
 
Appoḻutu karttar kāyīṉai nōkki: Uṉakku ēṉ ericcal uṇṭāyiṟṟu? Uṉ mukanāṭi ēṉ vēṟupaṭṭatu?
Then the Lord said to Cain: Why are you angry? Why is your face different?
7 நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.
 
Nī naṉmaiceytāl mēṉmai illaiyō? Nī naṉmaiceyyātiruntāl pāvam vācaṟpaṭiyil paṭuttirukkum; avaṉ ācai uṉṉaip paṟṟiyirukkum, nī avaṉai āṇṭukoḷḷuvāy eṉṟār.
Is it not great if you do good? If you do not do good, sin lies at the door; He said that his desire will be about you and you will conquer him.
8 காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.
 
Kāyīṉ taṉ cakōtaraṉākiya āpēlōṭē pēciṉāṉ; avarkaḷ vayalveḷiyil irukkum camayattil, kāyīṉ taṉ cakōtaraṉākiya āpēlukku virōtamāy eḻumpi, avaṉaik kolaiceytāṉ.
Cain spoke to his brother Abel; While they were in the field, Cain rose up against his brother Abel and killed him.
9 கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.
 
Karttar kāyīṉai nōkki: Uṉ cakōtaraṉākiya āpēl eṅkē eṉṟār; ataṟku avaṉ: Nāṉ aṟiyēṉ; eṉ cakōtaraṉukku nāṉ kāvalāḷiyō eṉṟāṉ.
The Lord said to Cain: Where is your brother Abel? And he said: I do not know; He said that I am the keeper of my brother.
10 அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.
 
Ataṟku avar: Eṉṉa ceytāy? Uṉ cakōtaraṉuṭaiya irattattiṉ cattam pūmiyiliruntu eṉṉai nōkkik kūppiṭukiṟatu.
And he said: What did you do? The sound of your brother's blood cries out to me from the earth.
11 இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக் கொள்ள தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.
 
Ippoḻutu uṉ cakōtaraṉuṭaiya irattattai uṉ kaiyilē vāṅkik koḷḷa taṉ vāyait tiṟanta intap pūmiyil nī capikkappaṭṭiruppāy.
Cursed be you on this earth that opened its mouth to receive your brother's blood on your hands.
12 நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.
 
Nī nilattaip payiriṭumpōtu, atu taṉ palaṉai iṉi uṉakkuk koṭātu; nī pūmiyil nilaiyaṟṟu alaikiṟavaṉāyiruppāy eṉṟār.
When you till the ground, it will no longer give you its fruit; He said you will be a restless wanderer on earth.
13 அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது.
 
Appoḻutu kāyīṉ karttarai nōkki: Eṉakku iṭṭa taṇṭaṉai eṉṉāl cakikkamuṭiyātu.
Then Cain said to the Lord: I cannot bear the punishment that has been given to me.
14 இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.
 
Iṉṟu eṉṉai intat tēcattiliruntu turattiviṭukiṟīr; nāṉ umatu camukattukku vilaki maṟaintu, pūmiyil nilaiyaṟṟu alaikiṟavaṉāyiruppēṉ; eṉṉaik kaṇṭupiṭikkiṟavaṉ evaṉum eṉṉaik koṉṟupōṭuvāṉē eṉṟāṉ.
Today you drive me out of this land; I will hide away from your presence, and be a restless wanderer on the earth; Whoever finds me will kill me, he said.
15 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.
 
Appoḻutu karttar avaṉai nōkki: Kāyīṉaik kollukiṟa evaṉ mēlum ēḻu paḻi cumarum eṉṟu colli; kāyīṉaik kaṇṭupiṭikkiṟavaṉ evaṉum avaṉaik koṉṟupōṭātapaṭikkuk karttar avaṉmēl oru aṭaiyāḷattaip pōṭṭār.
Then the Lord said to him: Whoever kills Cain will bear seven more sins; The Lord put a mark on Cain so that no one who found him would kill him.
16 அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.
 
Appaṭiyē kāyīṉ karttaruṭaiya cannitiyaiviṭṭup puṟappaṭṭu, ētēṉukkuk kiḻakkāṉa nōt eṉṉum tēcattil kuṭiyiruntāṉ.
So Cain left the Lord's presence and dwelt in the land of Noth, east of Eden.

The Descendants of Cain

17 காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான்.
 
Kāyīṉ taṉ maṉaiviyai aṟintāṉ; avaḷ karppavatiyāki, ēṉōkkaip peṟṟāḷ; appoḻutu avaṉ oru paṭṭaṇattaik kaṭṭi, antap paṭṭaṇattukkut taṉ kumāraṉākiya ēṉōkkuṭaiya pērai iṭṭāṉ.
Cain knew his wife; She became pregnant and gave birth to Enoch; Then he built a city and named the city after his son Enoch.
18 ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றான்; மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான்.
 
Ēṉōkkukku īrāt piṟantāṉ; īrāt mekuyavēlaip peṟṟāṉ; mekuyavēl mettūcavēlaip peṟṟāṉ; mettūcavēl lāmēkkaip peṟṟāṉ.
Enoch begat Erath; Erath had Meguiavel; Meguiael received Methuselah; Methuselah begat Lamech.
19 லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்குச் சில்லாள் என்று பேர்.
 
Lāmēkku iraṇṭu stirīkaḷai vivākampaṇṇiṉāṉ; oruttikku ātāḷ eṉṟu pēr, maṟṟoruttikkuc cillāḷ eṉṟu pēr.
Lamech married two wives; One is called Aadal and the other is called Chillal.
20 ஆதாள் யாபாலைப் பெற்றாள்; அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும், மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்.
 
Ātāḷ yāpālaip peṟṟāḷ; avaṉ kūṭāraṅkaḷil vācampaṇṇukiṟavarkaḷukkum, mantai mēykkiṟavarkaḷukkum takappaṉāṉāṉ.
Adal bore Jabal; He became a father to those who dwell in tents and shepherds.
21 அவன் சகோதரனுடைய பேர் யூபால்; அவன் கின்னரக்காரர், நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்.
 
Avaṉ cakōtaraṉuṭaiya pēr yūpāl; avaṉ kiṉṉarakkārar, nākacurakkārar yāvarukkum takappaṉāṉāṉ.
His brother's name was Jubal; He became the father of all the Kinnarakharas and Nagasurakaras.
22 சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.
 
Cillāḷum tūpāl kāyīṉaip peṟṟāḷ; avaṉ pittaḷai, irumpu mutaliyavaṟṟiṉ toḻilāḷar yāvarukkum ācāriyaṉāṉāṉ; tūpāl kāyīṉuṭaiya cakōtari nāmāḷ.
Zillah also bore Tubal Cain; He became a priest to all workers in brass, iron, etc.; Tubal was the sister of Cain.
23 லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் சத்தத்துக்குச் செவி கொடுங்கள்; எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன்.
 
Lāmēkku taṉ maṉaivikaḷaip pārttu: Ātāḷē, cillāḷē, nāṉ colvataik kēḷuṅkaḷ; lāmēkkiṉ maṉaivikaḷē, eṉ cattattukkuc cevi koṭuṅkaḷ; eṉakkuk kāyamuṇṭāka oru maṉuṣaṉaik koṉṟēṉ; eṉakkut taḻumpuṇṭāka oru vālipaṉaik kolaiceytēṉ.
And Lame said unto his wives, Hear me, my son, my child; Hear my voice, ye wives of Lamech; I killed a man to hurt me; I killed a boy as a scar.
24 காயீனுக்காக ஏழு பழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும் என்றான்.
 
Kāyīṉukkāka ēḻu paḻi cumarumāṉāl, lāmēkkukkāka eḻupattēḻu paḻi cumarum eṉṟāṉ.
He said that if Cain had seven sins, Lamech would have seventy-seven sins.

Seth and Enosh

25 பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலை செய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள்.
 
Piṉṉum ātām taṉ maṉaiviyai aṟintāṉ; avaḷ oru kumāraṉaip peṟṟu: Kāyīṉ kolai ceyta āpēlukkup patilāka, tēvaṉ eṉakku vēṟoru puttiraṉaik koṭuttār eṉṟu colli, avaṉukkuc cēt eṉṟu pēriṭṭāḷ.
And Adam knew his wife; And she bore a son, saying, God has given me another son instead of Abel, whom Cain killed, and called his name Seth.
26 சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.
 
Cēttukkum oru kumāraṉ piṟantāṉ; avaṉukku ēṉōs eṉṟu pēriṭṭāṉ; appoḻutu maṉuṣar karttaruṭaiya nāmattait toḻutukoḷḷa ārampittārkaḷ.
Seth also had a son; And he called his name Enos; Then people began to pray the Lord's name.
ஆதியாகமம் 4:1-க்கான விளக்கப்படம்ஆதியாகமம் 4:1-க்கான விளக்கப்படம்

குறுக்கு மேற்கோள்கள்

இந்த வசனத்திற்கு குறுக்கு மேற்கோள்கள் இல்லை.