PepLamb's Audio Bible
Loading God's Word...
என் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு | யோவான் 21:15-17
Gen.3.1

தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.
 
Tēvaṉākiya karttar uṇṭākkiṉa cakala kāṭṭu jīvaṉkaḷaippārkkilum carppamāṉatu tantiramuḷḷatāyiruntatu. Atu stirīyai nōkki: Nīṅkaḷ tōṭṭattiluḷḷa cakala viruṭcaṅkaḷiṉ kaṉiyaiyum pucikkavēṇṭām eṉṟu tēvaṉ coṉṉatu uṇṭō eṉṟatu.
The serpent was more cunning than all the wild creatures that the Lord God had made. And he said to the woman: Has God said that you shall not eat the fruit of every tree in the garden?

ஆதியாகமம் 3
ஆதியாகமம் 3:1-7
ஆதியாகமம் 3:1-24

The Serpent’s Deception

The Fall of Man
1 தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.
 
Tēvaṉākiya karttar uṇṭākkiṉa cakala kāṭṭu jīvaṉkaḷaippārkkilum carppamāṉatu tantiramuḷḷatāyiruntatu. Atu stirīyai nōkki: Nīṅkaḷ tōṭṭattiluḷḷa cakala viruṭcaṅkaḷiṉ kaṉiyaiyum pucikkavēṇṭām eṉṟu tēvaṉ coṉṉatu uṇṭō eṉṟatu.
The serpent was more cunning than all the wild creatures that the Lord God had made. And he said to the woman: Has God said that you shall not eat the fruit of every tree in the garden?
2 ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்;
 
Stirī carppattaip pārttu: Nāṅkaḷ tōṭṭattiluḷḷa viruṭcaṅkaḷiṉ kaṉikaḷaip pucikkalām;
The woman said to the serpent: We may eat the fruit of the trees of the garden;
3 ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக்குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.
 
Āṉālum, tōṭṭattiṉ naṭuvil irukkiṟa viruṭcattiṉ kaṉiyaikkuṟittu, tēvaṉ: Nīṅkaḷ cākātapaṭikku ataip pucikkavum atait toṭavum vēṇṭām eṉṟu coṉṉār eṉṟāḷ.
However, regarding the fruit of the tree in the middle of the garden, God said: Do not eat from it or touch it, lest you die.
4 அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;
 
Appoḻutu carppam stirīyai nōkki: Nīṅkaḷ cākavē cāvatillai;
Then the serpent said to the woman: You never die;
5 நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.
 
Nīṅkaḷ itaip pucikkum nāḷilē uṅkaḷ kaṇkaḷ tiṟakkappaṭum eṉṟum, nīṅkaḷ naṉmai tīmai aṟintu tēvarkaḷaippōl iruppīrkaḷ eṉṟum tēvaṉ aṟivār eṉṟatu.
God knows that in the day you eat this your eyes will be opened and you will be like gods, knowing good and evil.
6 அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.
 
Appoḻutu stirīyāṉavaḷ, anta viruṭcam pucippukku nallatum, pārvaikku iṉpamum, puttiyait teḷivikkiṟataṟku iccikkappaṭattakka viruṭcamumāy irukkiṟatu eṉṟu kaṇṭu, atiṉ kaṉiyaip paṟittu, pucittu, taṉ puruṣaṉukkum koṭuttāḷ; avaṉum pucittāṉ.
Then the woman saw that the tree was good for eating, pleasing to the eye, and a tree to be admired for enlightening the intellect, and plucked its fruit, ate it, and gave it to her husband; He also ate.
7 அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
 
Appoḻutu avarkaḷ iruvaruṭaiya kaṇkaḷum tiṟakkappaṭṭatu; avarkaḷ tāṅkaḷ nirvāṇikaḷ eṉṟu aṟintu, attiyilaikaḷait taittu, taṅkaḷukku araikkaccaikaḷai uṇṭupaṇṇiṉārkaḷ.
Then the eyes of both of them were opened; Realizing that they were nirvanis, they sewed the figs and made half girdles for themselves.

God Arraigns Adam and Eve

8 பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.
 
Pakalil kuḷircciyāṉa vēḷaiyilē tōṭṭattil ulāvukiṟa tēvaṉākiya karttaruṭaiya cattattai avarkaḷ kēṭṭārkaḷ. Appoḻutu ātāmum avaṉ maṉaiviyum tēvaṉākiya karttaruṭaiya cannitikku vilaki, tōṭṭattiṉ viruṭcaṅkaḷukkuḷḷē oḷittukkoṇṭārkaḷ.
They heard the voice of the Lord God walking in the garden in the cool of the day. Then Adam and his wife went away from the presence of the Lord God and hid themselves among the trees of the garden.
9 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.
 
Appoḻutu tēvaṉākiya karttar ātāmaik kūppiṭṭu: Nī eṅkē irukkiṟāy eṉṟār.
Then the Lord God called Adam and said: Where are you?
10 அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.
 
Ataṟku avaṉ: Nāṉ tēvarīruṭaiya cattattait tōṭṭattilē kēṭṭu, nāṉ nirvāṇiyāyiruppatiṉāl payantu, oḷittukkoṇṭēṉ eṉṟāṉ.
And he said: I heard the voice of Devarir in the garden, and because I was naked, I hid myself.
11 அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்.
 
Appoḻutu avar: Nī nirvāṇi eṉṟu uṉakku aṟivittavaṉ yār? Pucikkavēṇṭām eṉṟu nāṉ uṉakku vilakkiṉa viruṭcattiṉ kaṉiyaip pucittāyō eṉṟār.
Then he said: Who informed you that you are Nirvani? He said, "Have you eaten the fruit of the tree which I forbade you to eat?"
12 அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.
 
Ataṟku ātām: Eṉṉuṭaṉē irukkumpaṭi tēvarīr tanta stirīyāṉavaḷ avviruṭcattiṉ kaṉiyai eṉakkuk koṭuttāḷ, nāṉ pucittēṉ eṉṟāṉ.
And Adam said: The woman whom God gave to be with me gave me the fruit of that tree, and I ate.
13 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.
 
Appoḻutu tēvaṉākiya karttar stirīyai nōkki: Nī ippaṭic ceytatu eṉṉa eṉṟār. Stirīyāṉavaḷ: Carppam eṉṉai vañcittatu, nāṉ pucittēṉ eṉṟāḷ.
Then the Lord God said to the woman: What have you done like this? The woman said: The serpent deceived me and I ate.

The Fate of the Serpent

14 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;
 
Appoḻutu tēvaṉākiya karttar carppattaip pārttu: Nī itaic ceytapaṭiyāl cakala nāṭṭu mirukaṅkaḷilum cakala kāṭṭu mirukaṅkaḷilum capikkappaṭṭiruppāy, nī uṉ vayiṟṟiṉāl nakarntu, uyirōṭirukkum nāḷellām maṇṇait tiṉpāy;
Then the Lord God looked at the serpent and said: Because you have done this, cursed are you among all the beasts of the field and all the wild beasts.
15 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
 
Uṉakkum stirīkkum, uṉ vittukkum avaḷ vittukkum pakai uṇṭākkuvēṉ; avar uṉ talaiyai nacukkuvār, nī avar kutiṅkālai nacukkuvāy eṉṟār.
I will make enmity between you and the woman, between your seed and her seed; He will crush your head and you will crush his heel.

The Punishment of Mankind

16 அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.
 
Avar stirīyai nōkki: Nī karppavatiyāyirukkumpōtu uṉ vētaṉaiyai mikavum perukappaṇṇuvēṉ; vētaṉaiyōṭē piḷḷai peṟuvāy; uṉ ācai uṉ puruṣaṉaip paṟṟiyirukkum, avaṉ uṉṉai āṇṭukoḷḷuvāṉ eṉṟār.
He said to the woman: I will greatly increase your pain while you are pregnant; You will have a child with pain; He said that your desire will be for your husband and he will conquer you.
17 பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.
 
Piṉpu avar ātāmai nōkki: Nī uṉ maṉaiviyiṉ vārttaikkuc cevikoṭuttu, pucikkavēṇṭām eṉṟu nāṉ uṉakku vilakkiṉa viruṭcattiṉ kaṉiyaip pucittapaṭiyiṉālē, pūmi uṉ nimittam capikkappaṭṭirukkum; nī uyirōṭirukkum nāḷellām varuttattōṭē atiṉ palaṉaip pucippāy.
Then he said to Adam: Cursed is the ground because of you, because you listened to your wife and ate from the tree of which I commanded you not to eat; You will eat its fruit with regret all the days of your life.
18 அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.
 
Atu uṉakku muḷḷum kurukkum muḷaippikkum; veḷiyiṉ payirvakaikaḷaip pucippāy.
It will bring forth thorns and thistles for you; Eats outdoor crops.
19 நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
 
Nī pūmiyiliruntu eṭukkappaṭṭapaṭiyāl, nī pūmikkut tirumpumaṭṭum uṉ mukattiṉ vērvaiyāl ākāram pucippāy; nī maṇṇāyirukkiṟāy, maṇṇukkut tirumpuvāy eṉṟār.
Since you were taken from the earth, you will eat food with the roots of your face until you return to the earth; He said you are dust and to dust you will return.
20 ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.
 
Ātām taṉ maṉaivikku ēvāḷ eṉṟu pēriṭṭāṉ; ēṉeṉil, avaḷ jīvaṉuḷḷōrukkellām tāyāṉavaḷ.
Adam named his wife Eve; Because she is the mother of all living beings.

The Expulsion from Paradise

21 தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.
 
Tēvaṉākiya karttar ātāmukkum avaṉ maṉaivikkum tōl uṭaikaḷai uṇṭākki avarkaḷukku uṭuttiṉār.
The Lord God made skin garments for Adam and his wife and clothed them.
22 பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,
 
Piṉpu tēvaṉākiya karttar: Itō, maṉuṣaṉ naṉmai tīmai aṟiyattakkavaṉāy nam'mil oruvaraippōl āṉāṉ; ippoḻutum avaṉ taṉ kaiyai nīṭṭi jīvaviruṭcattiṉ kaṉiyaiyum paṟittu, pucittu, eṉṟaikkum uyirōṭirātapaṭikkuc ceyyavēṇṭum eṉṟu,
Then the Lord God said: Behold, man has become like one of us, knowing good and evil; That even now he should stretch out his hand and pluck the fruit of the tree of life and eat it and live forever.
23 அவன் எடுக்கப்பட்ட மண்ணைப்பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.
 
Avaṉ eṭukkappaṭṭa maṇṇaippaṇpaṭutta tēvaṉākiya karttar avaṉai ētēṉ tōṭṭattiliruntu aṉuppiviṭṭār.
The Lord God sent him from the Garden of Eden to cultivate the soil from which he was taken.
24 அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.
 
Avar maṉuṣaṉait turattiviṭṭu, jīvaviruṭcattukkup pōkum vaḻiyaik kāvalceyya ētēṉ tōṭṭattukkuk kiḻakkē kērupīṉkaḷaiyum, vīcikkoṇṭirukkiṟa cuṭaroḷi paṭṭayattaiyum vaittār.
He chased away the man and placed cherubim and a flaming sword east of the Garden of Eden to guard the way to the tree of life.
ஆதியாகமம் 3:1-க்கான விளக்கப்படம்

குறுக்கு மேற்கோள்கள்

இந்த வசனத்திற்கு குறுக்கு மேற்கோள்கள் இல்லை.