PepLamb's Audio Bible
Loading God's Word...
என் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு | யோவான் 21:15-17
Gen.2.1

இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன.
 
Ivvitamāka vāṉamum pūmiyum, avaikaḷiṉ carvacēṉaiyum uṇṭākkappaṭṭut tīrntaṉa.
Thus the heavens and the earth and their hosts were created and finished.

ஆதியாகமம் 2
ஆதியாகமம் 2:1-3
ஆதியாகமம் 2:1-3 ஆதியாகமம் 2:1-3

The Seventh Day—God Rest

The Seventh Day—God Rest
1 இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன.
 
Ivvitamāka vāṉamum pūmiyum, avaikaḷiṉ carvacēṉaiyum uṇṭākkappaṭṭut tīrntaṉa.
Thus the heavens and the earth and their hosts were created and finished.
2 தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
 
Tēvaṉ tām ceyta tam'muṭaiya kiriyaiyai ēḻām nāḷilē niṟaivēṟṟi, tām uṇṭākkiṉa tam'muṭaiya kiriyaikaḷaiyellām muṭittapiṉpu, ēḻām nāḷilē ōyntiruntār.
God completed his work on the seventh day and rested on the seventh day after completing all his works that he had created.
3 தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
 
Tēvaṉ tām ciruṣṭittu uṇṭupaṇṇiṉa tam'muṭaiya kiriyaikaḷaiyellām muṭittapiṉpu atilē ōyntiruntapaṭiyāl, tēvaṉ ēḻām nāḷai ācīrvatittu, ataip paricuttamākkiṉār.
God blessed the seventh day and sanctified it because God had rested on it after completing all His works of creation.

Man and Woman in the Garden

The First Man - Adam
4 தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.
 
Tēvaṉākiya karttar pūmiyaiyum vāṉattaiyum uṇṭākkiṉa nāḷilē, vāṉamum pūmiyum ciruṣṭikkappaṭṭa varalāṟu ivaikaḷē.
These are the history of the creation of the heavens and the earth on the day when the Lord God created the earth and the heavens.
5 நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.
 
Nilattiṉuṭaiya cakalavitac ceṭikaḷum pūmiyiṉmēl iṉṉum uṇṭākavillai, nilattiṉuṭaiya cakalavitap pūṇṭukaḷum iṉṉum muḷaikkavillai; ēṉeṉil tēvaṉākiya karttar pūmiyiṉmēl iṉṉum maḻaiyaip peyyappaṇṇavillai; nilattaip paṇpaṭutta maṉuṣaṉum iruntatillai.
All the plants of the earth had not yet grown on the earth, and all the plants of the earth had not yet sprouted; Because the Lord God has not yet caused rain to fall on the earth; There was no man to cultivate the land.
6 அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.
 
Appoḻutu mūṭupaṉi pūmiyiliruntu eḻumpi, pūmiyaiyellām naṉaittatu.
Then a mist arose from the earth and drenched the whole earth.
7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
 
Tēvaṉākiya karttar maṉuṣaṉaip pūmiyiṉ maṇṇiṉālē uruvākki, jīvacuvācattai avaṉ nāciyilē ūtiṉār, maṉuṣaṉ jīvāttumāvāṉāṉ.
The Lord God created man from the dust of the earth, breathed into his nostrils the breath of life, and man became a living soul.
God’s Garden - Tree of Life & Knowledge
8 தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.
 
Tēvaṉākiya karttar kiḻakkē ētēṉ eṉṉum oru tōṭṭattai uṇṭākki, tām uruvākkiṉa maṉuṣaṉai atilē vaittār.
The Lord God made a garden called Eden in the east and placed the people he had created in it.
9 தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.
 
Tēvaṉākiya karttar, pārvaikku aḻakum pucippukku nalamumāṉa cakalavita viruṭcaṅkaḷaiyum, tōṭṭattiṉ naṭuvilē jīvaviruṭcattaiyum, naṉmai tīmai aṟiyattakka viruṭcattaiyum pūmiyiliruntu muḷaikkappaṇṇiṉār.
The Lord God made all kinds of trees that are beautiful to look at and good for food grow out of the earth, the tree of life in the middle of the garden, and the tree of knowledge of good and evil.
10 தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.
 
Tōṭṭattukkut taṇṇīr pāyumpaṭi ētēṉiliruntu oru nati ōṭi, aṅkēyiruntu pirintu nālu periya āṟukaḷāyiṟṟu.
A river flowed from Eden to water the garden, and from there it divided into four great rivers.
11 முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.
 
Mutalām āṟṟukkup paicōṉ eṉṟu pēr, atu āvilā tēcam muḻuvataiyum cuṟṟi ōṭum; avviṭattilē poṉ viḷaiyum.
The first river was called the Bison, and it ran round the whole land of Air; Gold will be produced there.
12 அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக்கல்லும் உண்டு.
 
Antat tēcattiṉ poṉ nallatu; avviṭattilē pitōlākum, kōmētakakkallum uṇṭu.
The gold of that land is good; There is Pithol and Gomedhakkal in that place.
13 இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
 
Iraṇṭām āṟṟukkuk kīkōṉ eṉṟu pēr, atu ettiyōppiyā tēcam muḻuvataiyum cuṟṟi ōṭum.
The second river is called Kegon, and it runs through the whole land of Ethiopia.
14 மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்.
 
Mūṉṟām āṟṟukku itekkēl eṉṟu pēr, atu acīriyāvukkuk kiḻakkē ōṭum; nālām āṟṟukku aipirāttu eṉṟu pēr.
The name of the third river is Itechel, and it flows to the east of Assyria; The fourth river is called Ibratu.
15 தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.
 
Tēvaṉākiya karttar maṉuṣaṉai ētēṉ tōṭṭattil aḻaittuk koṇṭuvantu, ataip paṇpaṭuttavum kākkavum vaittār.
The Lord God brought man into the Garden of Eden to cultivate and protect it.
16 தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.
 
Tēvaṉākiya karttar maṉuṣaṉai nōkki: Nī tōṭṭattiluḷḷa cakala viruṭcattiṉ kaṉiyaiyum pucikkavē pucikkalām.
The Lord God said to the man: You may eat the fruit of every tree in the garden.
17 ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
 
Āṉālum naṉmai tīmai aṟiyattakka viruṭcattiṉ kaṉiyaip pucikkavēṇṭām; atai nī pucikkum nāḷil cākavē cāvāy eṉṟu kaṭṭaḷaiyiṭṭār.
But do not eat the fruit of the tree of the knowledge of good and evil; He commanded that the day you eat it you will die.
The First Woman - Eve
18 பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
 
Piṉpu, tēvaṉākiya karttar: Maṉuṣaṉ taṉimaiyāyiruppatu nallatalla, ēṟṟa tuṇaiyai avaṉukku uṇṭākkuvēṉ eṉṟār.
Then the Lord God said: It is not good for man to be alone, but I will make him a suitable companion.
19 தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று.
 
Tēvaṉākiya karttar veḷiyiṉ cakalavita mirukaṅkaḷaiyum, ākāyattiṉ cakalavitap paṟavaikaḷaiyum maṇṇiṉālē uruvākki, ātām avaikaḷukku eṉṉa pēriṭuvāṉ eṉṟu pārkkumpaṭi avaikaḷai avaṉiṭattil koṇṭuvantār; antanta jīvajantukku ātām ententap pēriṭṭāṉō atuvē ataṟkup pērāyiṟṟu.
The Lord God made of the dust all the beasts of the field, and all the birds of the air, and brought them to Adam to see what he would do to them; Whatever name Adam gave to the respective living creatures, that was their name.
20 அப்படியே ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.
 
Appaṭiyē ātām cakalavita nāṭṭu mirukaṅkaḷukkum, ākāyattup paṟavaikaḷukkum, cakalavitak kāṭṭumirukaṅkaḷukkum pēriṭṭāṉ; ātāmukkō ēṟṟa tuṇai iṉṉum kāṇappaṭavillai.
So Adam named all the beasts of the land, the birds of the air, and all the beasts of the field; Adam has yet to find a suitable partner.
21 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
 
Appoḻutu tēvaṉākiya karttar ātāmukku ayarnta nittiraiyai varappaṇṇiṉār, avaṉ nittiraiyaṭaintāṉ; avar avaṉ vilā elumpukaḷil oṉṟai eṭuttu, anta iṭattaic cataiyiṉāl aṭaittār.
Then the Lord God gave Adam a deep sleep, and he fell asleep; He took one of his ribs and stuffed the place with flesh.
22 தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.
 
Tēvaṉākiya karttar tām maṉuṣaṉil eṭutta vilā elumpai maṉuṣiyāka uruvākki, avaḷai maṉuṣaṉiṭattil koṇṭuvantār.
The Lord God made man from the rib which he took from man and brought her to man.
23 அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
 
Appoḻutu ātām: Ivaḷ eṉ elumpil elumpum, eṉ māmcattil māmcamumāy irukkiṟāḷ; ivaḷ maṉuṣaṉil eṭukkappaṭṭapaṭiyiṉāl maṉuṣi eṉṉappaṭuvāḷ eṉṟāṉ.
Then Adam said: She is bone of my bones and flesh of my flesh; He said, "What will become of Manushi as she is taken from Manushan?"
24 இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
 
Itiṉimittam puruṣaṉ taṉ takappaṉaiyum taṉ tāyaiyum viṭṭu, taṉ maṉaiviyōṭē icaintiruppāṉ; avarkaḷ orē māmcamāyiruppārkaḷ.
For this cause shall a man leave his father and his mother, and cleave unto his wife; They will become one flesh.
Naked - Not Ashamed
25 ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.
 
Ātāmum avaṉ maṉaiviyumākiya iruvarum nirvāṇikaḷāyiruntum, veṭkappaṭātiruntārkaḷ.
Both Adam and his wife were naked and not ashamed.

குறுக்கு மேற்கோள்கள்

இந்த வசனத்திற்கு குறுக்கு மேற்கோள்கள் இல்லை.