PepLamb's Audio Bible
Loading God's Word...
என் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு | யோவான் 21:15-17
Gen.11.1

பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது.
 
Pūmiyeṅkum orē pāṣaiyum, orē vitamāṉa pēccum iruntatu.
All over the earth there was one language and one form of speech.

ஆதியாகமம் 11
ஆதியாகமம் 11:1-9

The Tower of Babel

1 பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது.
 
Pūmiyeṅkum orē pāṣaiyum, orē vitamāṉa pēccum iruntatu.
All over the earth there was one language and one form of speech.
2 ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.
 
Jaṉaṅkaḷ kiḻakkēyiruntu pirayāṇampaṇṇukaiyil, cineyār tēcattilē camapūmiyaikkaṇṭu, aṅkē kuṭiyiruntārkaḷ.
As the people traveled from the east, they found a plateau in the land of Sinyar and settled there.
3 அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கலும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.
 
Appoḻutu avarkaḷ: Nām ceṅkal aṟuttu, atai naṉṟāyc cuṭuvōm vāruṅkaḷ eṉṟu oruvarōṭoruvar pēcikkoṇṭārkaḷ; kallukkup patilāka ceṅkalum, cāntukkup patilāka nilakkīlum avarkaḷukku iruntatu.
Then they said to one another: Come, let us cut bricks and burn them well; They had bricks instead of stone and asphalt instead of mortar.
4 பின்னும் அவர்கள்: நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.
 
Piṉṉum avarkaḷ: Nām pūmiyiṉ mīteṅkum citaṟippōkātapaṭikku, namakku oru nakarattaiyum, vāṉattai aḷāvum cikaramuḷḷa oru kōpurattaiyum kaṭṭi, namakkup pēr uṇṭākap paṇṇuvōm vāruṅkaḷ eṉṟu collikkoṇṭārkaḷ.
Then they said: Come, let us build a city for ourselves and a tower with a peak that reaches the sky, so that we will not be scattered over the earth.
5 மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார்.
 
Maṉuputtirar kaṭṭukiṟa nakarattaiyum kōpurattaiyum pārkkiṟataṟkuk karttar iṟaṅkiṉār.
The Lord came down to see the city and the tower that the sons of men were building.
6 அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்.
 
Appoḻutu karttar: Itō, jaṉaṅkaḷ orē kūṭṭamāy irukkiṟārkaḷ; avarkaḷ aṉaivarukkum orē pāṣaiyum irukkiṟatu; avarkaḷ itaic ceyyattoṭaṅkiṉārkaḷ; ippoḻutum tāṅkaḷ ceyya niṉaittatu oṉṟum taṭaipaṭamāṭṭātu eṉṟu irukkiṟārkaḷ.
Then the Lord said: Behold, the people are one assembly; They all have the same language; They began to do this; Even now they say that nothing will stop them from doing what they want to do.
7 நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்.
 
Nām iṟaṅkippōy, oruvar pēcuvatai maṟṟoruvar aṟiyātapaṭikku, aṅkē avarkaḷ pāṣaiyait tāṟumāṟākkuvōm eṉṟār.
He said, "Let us go down and confuse their language there, so that the one does not know what the other is talking about."
8 அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள்.
 
Appaṭiyē karttar avarkaḷai avviṭattiliruntu pūmiyiṉmīteṅkum citaṟippōkappaṇṇiṉār; appoḻutu nakaram kaṭṭukiṟatai viṭṭuviṭṭārkaḷ.
Thus the Lord scattered them from that place over the earth; Then they stopped building the city.
9 பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.
 
Pūmiyeṅkum vaḻaṅkiṉa pāṣaiyaik karttar avviṭattil tāṟumāṟākkiṉapaṭiyāl, atiṉ pēr pāpēl eṉṉappaṭṭatu; karttar avarkaḷai avviṭattiliruntu pūmiyiṉmīteṅkum citaṟippōkappaṇṇiṉār.
Because the Lord confused the language given to all the earth there, it was called Babel; The Lord scattered them all over the earth from that place.

Genealogy from Shem to Abram

10 சேமுடைய வம்சவரலாறு: ஜலப்பிரளயம் உண்டாகி இரண்டு வருஷத்திற்குப் பின்பு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றான்.
 
Cēmuṭaiya vamcavaralāṟu: Jalappiraḷayam uṇṭāki iraṇṭu varuṣattiṟkup piṉpu, cēm nūṟuvayatāṉapōtu, arpakcāttaip peṟṟāṉ.
Shem's genealogy: Two years after the flood, when Shem was a hundred years old, he fathered Arphaxad.
11 சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
 
Cēm arpakcāttaip peṟṟapiṉ ainnūṟu varuṣam uyirōṭiruntu, kumāraraiyum kumārattikaḷaiyum peṟṟāṉ.
And Shem lived five hundred years after he begat Arphaxad, and begat sons and daughters.
12 அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான்.
 
Arpakcāt muppattaintu vayatāṉapōtu cālāvaip peṟṟāṉ.
Arphaxad had Salah when he was thirty-five years old.
13 சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
 
Cālāvaip peṟṟapiṉ arpakcāt nāṉūṟṟu mūṉṟu varuṣam uyirōṭiruntu, kumāraraiyum kumārattikaḷaiyum peṟṟāṉ.
Arphaxad lived four hundred and three years after he had Salah, and had sons and daughters.
14 சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான்.
 
Cālā muppatu vayatāṉapōtu, ēpēraip peṟṟāṉ.
When Salah was thirty years old, he fathered Eber.
15 ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
 
Ēpēraip peṟṟapiṉ cālā nāṉūṟṟu mūṉṟu varuṣam uyirōṭiruntu, kumāraraiyum kumārattikaḷaiyum peṟṟāṉ.
And Salah lived four hundred and three years after he begat Eber, and begat sons and daughters.
16 ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான்.
 
Ēpēr muppattunālu vayatāṉapōtu, pēlēkaip peṟṟāṉ.
When Eber was thirty-four years old, he fathered Pelech.
17 பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
 
Pēlēkaip peṟṟapiṉ ēpēr nāṉūṟṟu muppatu varuṣam uyirōṭiruntu, kumāraraiyum kumārattikaḷaiyum peṟṟāṉ.
Eber lived four hundred and thirty years after he begat Pelek, and had sons and daughters.
18 பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான்.
 
Pēlēku muppatu vayatāṉapōtu, rekūvaip peṟṟāṉ.
When Pelegu was thirty years old, he begot Reku.
19 ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
 
Rekūvaip peṟṟapiṉ pēlēku irunūṟṟoṉpatu varuṣam uyirōṭiruntu, kumāraraiyum kumārattikaḷaiyum peṟṟāṉ.
Pelek lived after he begat Reku two hundred and nine years, and begat sons and daughters.
20 ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப் பெற்றான்.
 
Rekū muppattiraṇṭu vayatāṉapōtu, cerūkaip peṟṟāṉ.
When Regu was thirty-two years old, he fathered Serug.
21 செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
 
Cerūkaip peṟṟapiṉ rekū irunūṟṟēḻu varuṣam uyirōṭiruntu, kumāraraiyum kumārattikaḷaiyum peṟṟāṉ.
Reku lived two hundred and seven years after he begat Serug, and begat sons and daughters.
22 செரூகு முப்பது வயதானபோது, நாகோரைப் பெற்றான்.
 
Cerūku muppatu vayatāṉapōtu, nākōraip peṟṟāṉ.
When Serugu was thirty years old, he fathered Nagor.
23 நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
 
Nākōraip peṟṟapiṉ cerūku irunūṟu varuṣam uyirōṭiruntu, kumāraraiyum kumārattikaḷaiyum peṟṟāṉ.
After he begat Nagor, Serug lived for two hundred years and begat sons and daughters.
24 நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப் பெற்றான்.
 
Nākōr irupattoṉpatu vayatāṉapōtu, tērākaip peṟṟāṉ.
When Nagor was twenty-nine years old, he fathered Terah.
25 தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
 
Tērākaip peṟṟapiṉ nākōr nūṟṟuppattoṉpatu varuṣam uyirōṭiruntu, kumāraraiyum kumārattikaḷaiyum peṟṟāṉ.
Nagor lived for one hundred and nine years after begetting Terah and begat sons and daughters.
26 தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.
 
Tērāku eḻupatu vayatāṉapōtu, āpirām, nākōr, ārāṉ eṉpavarkaḷaip peṟṟāṉ.
When Terah was seventy years old, he fathered Abram, Nahor, and Aaron.

Terah’s Descendants

27 தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்; ஆரான் லோத்தைப் பெற்றான்.
 
Tērākuṭaiya vamcavaralāṟu: Tērāku āpirām, nākōr, ārāṉ eṉpavarkaḷaip peṟṟāṉ; ārāṉ lōttaip peṟṟāṉ.
Genealogy of Terah: Terah begat Abram, Nahor, and Aaron; Aaron begat Lot.
28 ஆரான் தன் ஜந்மபூமியாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு மரிக்குமுன்னே மரித்தான்.
 
Ārāṉ taṉ janmapūmiyākiya ūr eṉkiṟa kaltēyar tēcattup paṭṭaṇattilē taṉ takappaṉākiya tērāku marikkumuṉṉē marittāṉ.
Aaron died before his father, Terah, in his native city of Ur, a Chaldean nation.
29 ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண் கொண்டார்கள்; ஆபிராமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன்.
 
Āpirāmum nākōrum taṅkaḷukkup peṇ koṇṭārkaḷ; āpirāmuṭaiya maṉaivikkuc cārāy eṉṟu pēr; nākōruṭaiya maṉaivikku milkkāḷ eṉṟu pēr; ivaḷ ārāṉuṭaiya kumāratti; anta ārāṉ milkkāḷukkum iskāḷukkum takappaṉ.
Abram and Nagor took wives for themselves; Abram's wife's name was Sarai; Nagor's wife was named Milkal; She was the daughter of Aaron; And Aaron was the father of Milcah and Ishcal.
30 சாராய்க்குப் பிள்ளையில்லை; மலடியாயிருந்தாள்.
 
Cārāykkup piḷḷaiyillai; malaṭiyāyiruntāḷ.
Sarai had no children; She was barren.
31 தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும், தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான் மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்.
 
Tērāku taṉ kumāraṉākiya āpirāmaiyum, ārāṉuṭaiya kumāraṉum, taṉ pēraṉumāyirunta lōttaiyum, taṉ kumāraṉ āpirāmuṭaiya maṉaiviyākiya taṉ marumakaḷ cārāyaiyum aḻaittukkoṇṭu, avarkaḷuṭaṉē ūr eṉkiṟa kaltēyaruṭaiya paṭṭaṇattai viṭṭu, kāṉāṉ tēcattukkup pōkap puṟappaṭṭāṉ; avarkaḷ ārāṉ maṭṭum vantapōtu, aṅkē iruntuviṭṭārkaḷ.
Terah took his son Abram, the son of Aaron, his grandson Lot, and his daughter-in-law Sarai, the wife of his son Abram, and left Ur, the Chaldean city, to go to the land of Canaan; When they came to Aaron alone, they remained there.
32 தேராகுடைய ஆயுசு நாட்கள் இருநூற்றைந்து வருஷம்; தேராகு ஆரானிலே மரித்தான்.
 
Tērākuṭaiya āyucu nāṭkaḷ irunūṟṟaintu varuṣam; tērāku ārāṉilē marittāṉ.
The days of Tera's life were two hundred and five years; Teraku died in Aran.
ஆதியாகமம் 11:1-க்கான விளக்கப்படம்

குறுக்கு மேற்கோள்கள்

இந்த வசனத்திற்கு குறுக்கு மேற்கோள்கள் இல்லை.